ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதாதையுடன் கேகாலையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
இப்போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்