முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ததாக சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து அதிர்ச்சியடைந்த 66 வயதுடைய நபர் ஒருவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
தொம்பே பிரதேசத்திலேயே இந்த தற்கொலை முயற்சி.
நீண்டகாலமாக ராஜபக்ச குடும்பத்தை ஆழமாக நேசித்து வந்த இந்த நபர், கோட்டபாய பதவி விலகினால் தான் வாழமாட்டேன் என அங்குள்ள மக்களிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வீட்டினுள் இருந்தவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.