ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் (Gotabaya Rajapaksa)- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையே எதிர்வரும் 15-03-2022-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நேரடிப் பேச்சுவார்த்தை நான் வரவேற்கின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதைப் பெற வேண்டுமானாலும் ஜனாதிபதியுடன்தான் அது தொடர்பாக பேச வேண்டும். அப்போதுதான் கிடைக்கக் கூடியவற்றை அவர்கள் பெறலாம். அப்படிப் பேச்சு நடத்த அவர்கள் முன்வந்திருப்பது நல்லது. அந்த நேரடிப் பேச்சை நான் வரவேற்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.