ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, அரசியல் நிலைவரம் தொடர்பான புலனாய்வு அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டும் நிலையில், அ ந்த அறிக்கையானது அரசாங்கத்திற்கு அவ்வளவு நல்லதாக இல்லை என கூறப்படுகின்றது.
மக்கள் மத்தியில் ராஜபக்ச அரசாங்கத்திற்கான செல்வாக்கு நாளாந்தம் வீழ்ச்சியடைந்துவருவதாகவும், தீவிர ஆதரவை வெளிப்படுத்தியர்கள்கூட மாற்றுவழியை நாடுகின்றதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல அரசாங்கத்தின்மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்திக்கான ஆதரவு 17 வீதத்தால் அதிகரித்துள்ளது எனவும் புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டுள்ளதால், அரசின் வாக்கு வங்கிக்கு ஏற்படும் தாக்கம் பற்றி தற்போதே ஒரு முடிவுக்கு வரமுடியாது எனவும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்க:ள் தெரிவிக்கின்றன.