அநுராதபுரம் உள்ள ஞானக்கா என்ற பெண் சோதிடரின் வீட்டை இரவு பெரும் எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் அநுராரதபுரம் இசுருபுர பிரதேசத்தில் நேற்று இரவு (04-04-2022) இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaska) உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களின் சோதிடரான ஞானாக்கா என்ற பெண்ணின் வீடும், காளி கோயிலும் அனுராதபுரம் விமான நிலைய வீதியில் உள்ள இசுருபுர பகுதியில் உள்ளது.
இன்று பெருமளவான போராட்டக்காரர்கள் ஞானக்காவின் வீட்டை சுற்றிவளைத்து போராட்டம் நடத்தினர். அத்துடன் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தினார்கள்.
அந்த பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாரால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர்.
ஞானாக்காவின் வீடு, வழிபாட்டிடத்திற்கு இராணுவமும் பொலிசாரும் பாதுகாப்பு வழங்கினர். ஞானாக்காவின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.