நீரழிவு நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்துவதற்கு கொத்தமல்லி பெரிதும் உதவுகிறது. எனவே இந்த கோடை காலங்களில் வழக்கமான டீ பருகுவதற்கு பதிலாக கொத்தமல்லி டீ சாப்பிட்டு அதன் பலன்களை பெறுவோம்.
வைட்டமின்கள் A, C, மற்றும் K, போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொத்தமல்லியில் காணப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தினமும் கொத்தமல்லி டீ பருகுமாறு நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
செரிமானம்
கொத்தமல்லி தேநீரில் டையூரிட்டிக் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதன் காரணமாக இது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளித்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. வயிற்று வலி அல்லது செரிமான அசௌகரியம் இருக்கும் பொழுது ஒரு கப் கொத்தமல்லி தேநீர் சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கு நிச்சயமாக உடனடி நிவாரணம் கிடைக்கும்.
ஒற்றைத் தலைவலி
கொத்தமல்லி தேநீர் சாப்பிடுவதன் மூலமாக ஒற்றைத் தலைவலியிலிருந்து நீங்கள் விடுபடலாம். ஒருவேளை நீங்கள் ஒற்றைத் தலைவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறீர்கள் என்றால் உங்களுடைய அன்றாட வழக்கத்தில் இந்த கொத்தமல்லி தேநீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
நச்சு நீக்கம்
கொத்தமல்லி தேநீர் கல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள நச்சுக்களை அகற்றி அவற்றை சுத்தப்படுத்துகிறது. குறிப்பாக ஹெவி மீல்ஸ் சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் கொத்தமல்லி தேநீர் பருகுவது நல்லது. உடலின் நச்சு நீக்க செயல்முறையை தூண்டுவதற்கான இயற்கையான வழியாக இது அமைகிறது.
வீக்க எதிர்ப்பு பண்புகள்
நாம் ஏற்கனவே கூறியது போல கொத்தமல்லி தேநீரில் காணப்படும் வீக்க எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி, ஆர்த்ரைட்டிஸ் மற்றும் பிற வீக்கம் காரணமாக ஏற்படும் மருத்துவ நிலைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. வழக்கமான முறையில் கொத்தமல்லி தேநீரை நீங்கள் பருகி வந்தால் நாளடைவில் உங்களுடைய மூட்டு ஆரோக்கியம் மேம்படும்.
புத்துணர்ச்சி
கொத்தமல்லி தேநீர் நமது ஆரோக்கியத்திற்கு வழங்கும் பலன்களையும் தாண்டி இதன் அற்புதமான நறுமணம் காரணமாக இது நம்மை புத்துணர்ச்சியோடு இருக்க உதவுகிறது. இந்த மூலிகை பானத்தை நீங்கள் சூடாகவோ அல்லது குளிர்ந்த நிலையிலோ பருகலாம்.