கொவிட் தொற்றாளர்களுக்காக விசேடமாக ஒதுக்கப்பட்ட நாவுல – அம்பன வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் காணப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார பிரிவு விசேட பரிசோதனை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
கடந்த 24ஆம் திகதி நோயாளிகளினால் வழங்கிய தகவலுக்கமைய விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் உணவு ஒப்பந்தம் உடனடியாக கைவிடப்பட்டுள்ளது.
உணவு மாதிரிகளை சோதனையிட்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மாத்தளை கொவிட் தடுப்பு குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாகாண சுகாதார சேவை பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் நோயாளிகளுக்காக சுகாதார பாதுகாப்பு உணவு வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.