இந்தியாவிலிருந்து 40,000 மெட்ரிக் தொன் அடங்கிய ஒரு தொகுதி டீசல் கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது.
1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனின் கீழ் குறித்த எரிபொருள் பெற்றுக்கொள்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதேவேளை இந்தியாவில் இருந்து வந்த டீசல் கப்பலுடன் சேர்த்து தற்போது கொழும்பு துறைமுகத்தில் 4 எரிபொருள் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 4 கப்பல்களில் இன்று இரண்டு கப்பல்களுக்கு டொலர் வழங்கப்பட்டு அவற்றிலிருந்து டீசல், பெற்றோல் இறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் இன்னும் 10 நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சமையல் எரிவாயு கப்பல்கள் இரண்டு நாட்டிற்கு வந்துள்ளன. இவற்றிற்கான 7 மில்லியன் டொலர் நாளை மறுதினம் திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது.