கொழும்பின் சில பகுதிகளில் இன்று (13) இரவு 8 மணி முதல் 28 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (13) இரவு 8 மணி முதல் நாளை (14) நள்ளிரவு 12 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 04, 05, 06, 07 மற்றும் 08 பகுதிகளிலும் கோட்டை, கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் மஹரகம, பொரலஸ்கமுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதான நீர்குழாயின் திருத்த வேலை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.