கொழும்பின் புறநகர் பகுதியில் புதையலில் பெற்றுக் கொண்ட தங்கத்தை வழங்குவதாக கூறி கோடீஸ்வர வர்த்தகர்களை ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
புதையலில் பெற்றுக் கொண்ட தங்கம் என கூறி புகைப்படங்கள், காணொளிகளை வட்ஸ்அப் ஊடாக கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு அனுப்பி கொள்ளையடிக்கும் நடவடிக்கைக்கையில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது.
30 கிலோ கிராம் தங்கம் தங்களிடம் உள்ள நிலையில் ஒரு கிலோ தங்கத்தை 90 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அந்த கும்பல் தெரிவித்துள்ளது.
இந்த தங்கத்தை கொள்வனவு செய்வதென்றால் அவர்களிடமுள்ள பணத்தை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக அனுப்புமாறு குறிப்பிட்டுள்ளனர்.
இரு வேறு இடங்களுக்கு பணத்தை கொண்டு வர செய்து, அவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச் செல்வது இந்த கும்பலின் நோக்கமாகும்.
இந்த நிலையில் வர்த்தகர்கள் போன்று நடித்து இந்த கும்பலை சிக்க வைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது ராகம பிரதேசத்தை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் இந்த கொடுக்கல் வாங்கல்களின் இடைநிலை தரகராக செயற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலில் அந்த யுவதியை கைது செய்வதற்கே பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அந்த யுவதியின் ஊடாக கொள்ளை கும்பலை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.