கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று (05-12-2022) நடைபெற்ற 18 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றி பாய்தல் நிகழ்வில் மகாஜனக்கல்லூரி மாணவி ஒருவர் தங்கப்பதக்கத்தை வெற்றுள்ளார்.
சி.சுவர்ணா என்ற மாணவியே 3.20 மீற்றர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.