இலங்கையில் அரசியல் மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
ஆளும் கட்சிக்குள் மோதல், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில் மோதல், எதிர்கட்சிக்குள் மோதல் என்ற நிலையில் பல செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் நேரடியற்ற அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் பேச்சுகள் இடம்பெறுகின்றன.
முன்னரைப் போலல்லாமல் சந்திரிக்காவின் சில நிகழ்வுகளில் ஆளும் மற்றும் அரசாங்கத்தில் முரண்படுவோரைக் காணமுடிகிறது.
அண்மையில் இடம்பெற்ற பண்டாரநாயக்க நினைவு நிகழ்வின்போது அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுர யாப்பா பிரியதர்சன, சுசில் பிரேம்ஜயந்த, குமார வெல்கம் உட்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை நேற்று இடம்பெற்ற தரிந்து தொட்டாவத்த எழுதிய ‘சந்திரிகா’ என்ற சுயசரிதையை வெளியிடும் நிகழ்வின் போது, ஒன்பது வருடங்களுக்கு முன்னர், குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவும் பங்கேற்றார்
அத்துடன் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றமை,கொழும்பின் அரசியலில் புதிய எண்ணப்பாடுகளை தோற்றுவித்துள்ளதாக மக்கள் மத்தியில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
இதேவேளை இலங்கையின் அரசியலி்ல் முழுமையான கூட்டணி ஒன்றுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தில் இருந்து அகற்றப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிட்டுள்ளது.