கொழும்பு – காலி முகத்திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போது திடீரென நபர் ஒருவர் ஜனாதிபதி செயலகத்திற்குள் இருந்து வெளியே வந்துள்ளார்.
நேற்று காலை 9.20 மணியளவில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்கள் காலி முகத்திடலுக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். எவ்வித அரசியல் கட்சி பேதமின்றி இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் உலக மக்களின் அவதானத்திற்குள்ளாகியிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து இராணுவத்தினருடன் சிவில் உடையில் வந்த நபர் ஒருவர் வித்தியாசமான முறையில் செயற்பட்டுள்ளார்.
ஹிந்தி படத்தின் நடிகர் போன்று போராட்டக்காரர்கள் முன் வந்து வித்தியாசமான சைகளை காண்பித்துள்ளார். யார் இந்த நடிகர் என மக்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பார்த்த போது அவர் நாட்டை விட்டு தப்பியோடியதாக கூறப்படும் நிஸ்ஸங்க சேனாதிபதி என தெரியவந்துள்ளது.
அவர் நாட்டிற்கு வந்து தனது வழமையான பணிகளை ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நாட்டில் பாரிய பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.