கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டினை தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று சுற்றிவளைத்து அச்சுறுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அவரது வீட்டுக்கு முன்பாக பெருமளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.