கொழும்பின் பல இடங்களில் இன்றைய தினம் 14 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
நீர்விநியோகத்தடை இன்று காலை 8 மணி முதல் இரவு 10 வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு 01 முதல் 04 வரையிலான பகுதிகளிலும், கொழும்பு 07 முதல் 15 வரையான பகுதிகளிலும் இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மாளிகாகந்த மற்றும் எலிஹவுஸ் நீர் வளாகங்களுக்கு நீரை விநியோகிக்கும் குழாயில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப்பணிகள் காரணமாகவே நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.