ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகள் மற்றும் ஒரு ரன் அவுட் செய்து மிரட்டினார்.
ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் குவித்தது. ரிங்கு சிங் 46 ஓட்டங்களும், கேப்டன் நிதிஷ் ராணா 42 ஓட்டங்களும் விளாசினர்.
சிறப்பாக பந்துவீசிய தமிழக வீரர் நடராஜன், நெருக்கடி கொடுத்த ரிங்கு சிங் மற்றும் தாக்கூர் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், ஹர்ஷித் ராணாவை ரன்அவுட் செய்தார்.
அத்துடன் சன்ரைசர்ஸ் தரப்பில் ஜென்ஸன் 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார்,மார்க்ரம், மார்கண்டே மற்றும் கார்த்திக் தியாகி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.