கொரோனா வைரஸின் டெல்டா திரிபு எதிர்காலத்தில் காற்றின் ஊடாக பரவக்கூடிய அபாயம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் பல்வேறு வகையான வைரஸ் தொற்றுக்கள் பரவு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் டெல்டா வைரஸ் பரவும் அபாயம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.