அபாயம் மிக்க மாவட்டமாக கிளிநொச்சி அடையாளம் காணப்பட்டுள்ளதாக. பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில், முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நாள் தொடக்கம் கடந்த மாதம் 31ஆம் திகதி வரை 1,400
தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், ஆனால் இந்த மாதம் முதல் 16 நள்;களில் மாத்திரம் 1246 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் தீவிரமாகப் பரவிவரும் கொரனா, தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் அதிதீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது என்பதனையே இது காட்டுகின்றதெனவும், அவர் கூறினார்.
146,000 சனத் தொகையை கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில், நாளாந்தம் 100க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனரெனத் தரிவித்த அவர்,
அதிலும் பரிசோதனைக்கு செல்கின்றவர்களிலேயே இந்த எண்ணிக்கையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் என்றும் இதுவோர் ஆபத்தான நிலைமை என்றும் கூறினார்.