இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளுடன் மக்கள் காத்திருந்து எரிபொருளினை பெற காத்திருக்கும் அவலநிலை தோன்றியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கட்டுள்ளதனால், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்ந்து இன்று 7 ஆவது நாளாகவும் போராட்டம் நீடித்து வருகிறது.
இந்தியா மற்றும் சீனா கடனுதவி வழங்கினாலும் எரிபொருளின் பற்றாக்குறையை தீர்க்கமுடியவில்லை.
இந்நிலையில் கொட்டும் மழையில் குழந்தைகளுடன் மக்கள் எரிபொருளுக்காக காத்திருக்கும் புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளது