இந்தியாவின் சண்டிகரில் பெ ண் போக்குவரத்து போலீஸ் ஒருவர் கை குழந்தையுடன் பணி செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.ப்ரியங்காவின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தாலும் சில விமர்சனங்களும் எழுந்தன. கை குழந்தையுடன் உள்ள போலீசுக்கு இத்தகைய க டுமையான பணி வழங்கப்பட்டிருப்பதும் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டிருந்தது.
அந்த பெண் போலீஸீன் பெயர் ப்ரியங்கா. சண்டிகர் போக்குவரத்து காவல் துறையில் பணி புரிந்து வருகிறார். பிரசவ விடுமுறையில் இருந்தவர் விடுமுறை முடிந்து மூன்று நாட்களுக்கு முன்பு பணிக்கு திரும்பியுள்ளார்.
முதல் இரண்டு நாட்கள் அவருக்கு எளிய பணி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மூன்றாவத் நாள் வீட்டிலிந்து தொலைவில் அவருக்கு பணி வழங்கப்பட்டிருந்தது.
வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால் குழந்தையையும் உடன் எடுத்துச் சென்றுள்ளார். கையில் குழந்தையை வைத்துக் கொண்டு அவர் பணி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானது.