இங்கிலாந்தின் உறுதிசெய்யப்பட்ட குரங்கு அம்மை தொற்று பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபால் உறவு கொண்டவர்கள் அல்லது ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் பிற ஆண்கள் என புதிய தரவு காட்டுகிறது. மே 6ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகரவத்தால் அடையாளம் காணப்பட்ட 190 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளில், 183 இங்கிலாந்திலும், நான்கு ஸ்கொட்லாந்திலும், இரண்டு வடக்கு அயர்லாந்திலும், ஒன்று வேல்ஸிலும் இருந்தன.
இதில், இங்கிலாந்தின் 86 சதவீத தொற்றுகள் லண்டனில் வசிப்பவர்கள் மற்றும் இருவர் மட்டுமே பெண்கள் ஆவர். 20 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டுள்ளது.
111 தொற்றுகள் ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபாலினம் அல்லது ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் பிற ஆண்கள் என அறியப்பட்டவர்கள் என்று முகரவகம் தெரிவித்துள்ளது.
இன்றுவரை நடத்தப்பட்ட விசாரணைகள், இங்கிலாந்து மற்றும் வெளிநாடுகளில் ஒரினச் சேர்க்கையாளர்களுக்கான மதுபானசாலைகள், சானாக்கள் மற்றும் டேட்டிங் பயன்பாடுகளின் பயன்பாடு ஆகியவற்றுக்கான இணைப்புகளை அடையாளம் கண்டுள்ளன என்று பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகரவகம் தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை தொற்று பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஓரினச்சேர்க்கையாளர்கள்,London News
No Comments1 Min Read

