இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் குடும்ப சூழல் காரணமாக மனைவி வெளிநாட்டில் வேலைக்கு சென்ற நிலையில், கணவன் இன்னொருவரின் மனைவியுடன் மாயமான சம்பவம் இரண்டு குடும்பத்தினரை சிக்கலில் தள்ளியுள்ளது.ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரே இன்னொருவரின் மனைவியுடன் மாயமானவர்.
மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் குடும்ப வறுமை காரணமாக ராஜ்குமாரின் மனைவி குவைத் நாட்டுக்கு வேலைக்காக சென்றுள்ளார்அங்கிருந்து அவர் ஒவ்வொரு மாதமும் கணவர் ராஜ்குமார் பெயரில் பணம் அனுப்பியும் வந்துள்ளார்.
இதனால் தங்களுக்கு இருந்த கடனை எல்லாம் திருப்பி செலுத்த முடிந்ததுடன், பிள்ளைகளின் கல்விக்கும் அது பேருதவியாக இருந்துள்ளது.
இந்த நிலையில் ராஜ்குமாருக்கு அதே கிராமத்தை சேர்ந்த சுகுணாகுமாரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது சேர்ந்து வாழ முடிவெடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது இந்த நிலையில் மார்ச் 4ம் திகதி நள்ளிரவு சுகுணாகுமாரி தமது கணவன் மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு திடீரென்று மாயமாகியுள்ளார்.
அடுத்த நாள் மார்ச் 5ம் திகதி ராஜ்குமாரும் தமது 3 பெண் பிள்ளைகளை தனியாக தவிக்க விட்டுவிட்டு மாயமாகியுள்ளார்.
சுகுணாகுமாரியின் சமீபத்திய நடவடிக்கையில் ஏற்கனவே சந்தேகம் அடைந்திருந்த கணவர் சந்திரசேகர், உடனடியாக பொலிசாரை நாடி, தமது மனைவியும் ராஜ்குமாரும் மாயமாகியுள்ளதை புகாராக தெரிவித்துள்ளார்.ஆனால் ராஜ்குமாரும் சுகுணாவும் ஒன்றாக திட்டமிட்டு மாயமானார்களா இல்லை இருவரும் தனித்தனியாக மாயமானார்களா என்பது தொடர்பில் பொலிசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.