குடிபோதையில் நள்ளிரவில் தன் மகனின் வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா முகுடகேரி கிராமத்தில் கானூரு சாலையில் வசந்த் என்பவரின் லைன் வீட்டில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தவர் எரவர மஞ்சு
இவரது தந்தை எரவர போஜா மஞ்சுவின் வீட்டிற்கு அவரது உறவினர்கள் சிலர் வந்து தங்கியுள்ளனர் இந்நிலையில், குடிபோதைக்கு அடிமையான எரவர போஜா, நேற்று முன்தினம் இரவு அதிகளவு மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார் எரவர போஜாவிற்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது
குடிபோதையில் தன் மனைவியிடம் சண்டை போட்ட எரவர போஜா, நள்ளிரவில் எழுந்து வெளியே வந்து வீட்டின் கதவு மற்றும் ஜென்னல்களை வெளிபக்கமாக தாழிட்டுள்ளார் பின்னர், வீட்டின் மீது பெட்ேராலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்
நள்ளிரவு என்பதால் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்வீடு முழுவதும் தீப்பற்றி எரிவதை கண்ட மஞ்சு குடும்பத்தினர் அலறியடித்து கூச்சல் இட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து வீட்டில் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தனர்
ஆனால், இந்த தீ விபத்தில் 6 வயது சிறுமி பிரார்த்தனா மற்றும் சீதா (45), பேபி (40) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்மேலும் தீயில் படுகாயமடைந்த 5 பேரை மீட்டு மைசூரு ேகஆர்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்
அங்கு சிகிச்சை பெற்று வந்த விஷ்வாஸ் (3), பிரகாஷ் (7), மற்றொரு விஷ்வாஸ் (6) ஆகிய மூன்று பேர் சிசிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர் மேலும் பாக்யா (40), பாஜி (60) ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது