கேரள மாநிலத்தில் கணவரை கட்டையால் மனைவி அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு (14-04-2024) பத்தனம்திட்டாவில் மேற்கு ஆதிவாசி காலனி அட்டாடோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவததில் அதே பகுதியை சேர்ந்த சேர்நதவர் ரத்னாகரன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று நள்ளிரவு 11 மணியளவில் கணவன் – மனைவி இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மனைவி தனது கணவர் ரத்னாகரனை கட்டையால் தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் கணவன் மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நிலக்கல்லில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து தவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், ரத்னாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சாந்தாவை கைது செய்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் தனது கணவர் ரத்னாகரனை சாந்தா கொலை செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.