கிளிநொச்சி நிலவும் எரிபொருள் வள பங்கீடு தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதியுடன் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் நேற்று (15) ஆராயப்பட்ட விடயங்களில் வீட்டுப் பாவனைக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தினை வாராந்தம் 5 லீட்டர் வீதம் குடும்ப அட்டை ஊடாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறிப்பாக விவசாயம், கடற்றொழில் துறைகளுக்கான விநியோகத்தினை சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளின் உறுதிப்படுத்தலுடன் கூடிய கடிதத்தினை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சமர்ப்பித்துப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை முன்னெடுக்கும் இக் கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி கலந்துரையாடலில் மாவட்ட செயலக அதிகாரிகள், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதி, பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்