கிளிநொச்சி – பூநகரி, ஜெயபுரம் பகுதியில் விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட கிராம உத்தியோகத்தரும் அவரது மனைவியும் காட்டு யானை தாக்கி உயிரிழந்தமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
யாழ். சாவகச்சேரியிலிருந்து பூநகரியிலுள்ள தமது விட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே நேற்றிரவு இவர்களை யானை தாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் பூநகரியை சேர்ந்த 48 வயதான பாலசிங்கம் நகுலேஸ்வரன் எனும் கிராம உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதன்போது, கடும் காயங்களுக்கு உள்ளான அவரது மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதோடு
மரண விசாரணை நிறைவு பெற்றுள்ள நிலையில், சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.