கிளிநொச்சியில் தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக 25 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு ஏற்றப்பட்ட சினோபார்ம் கொரோனா தடுப்பூசியால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு மேல் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இதுவரை வடக்கில் தடுப்பூசி பெற்றவர்களில் ஒவ்வாமை என அனுமதிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.