முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில் கொழும்பில் உள்ள CH & FC கிளப்பில் தகாத வார்த்தைகளை பிரயோகித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டகாணொளி வெளியாகியுள்ளது
சம்பவ இடத்திலிருந்து வெளியேறும் ஹரின் கத்திக் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஹரின் பெர்னாண்டோவின் இந்த செயற்பாட்டால் கிளப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
எனினும், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை என கறுவாத்தோட்டப் பொலிஸார் தெரிவித்தனர்