இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியின் 42 வது பிறந்தநாள் இன்றைய தினம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதன்படி, தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு ஹைதராபாத்தில் 52 அடி நீளமான பதாகை (கட் அவுட்) வைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பதாகை ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
2007 டி20 உலகக்கோப்பை, 2011 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் கோப்பை என்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே தலைவர் என்ற பெருமை மகேந்திர சிங் தோனிக்கு உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக 5வது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 4 ஆண்டுகள் கடந்த பிறகு கூட இன்றும் தோனியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.