தமிழகத்தில் நடக்க முடியாத வயதான மனைவியை முதுகில் சுமந்து சென்று கணவர் வாக்களிக்கவைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக, இரண்டு கால்களையும் இழந்த சுமதி வயது முதிர்ந்த பெண், கணவரின் உதவியுடன் வாக்களித்தது சென்றுள்ளார்.
சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக்கு சுமதி, தனது கணவர் இராமசாமியின் மீன்பாடி வண்டியில் வந்து இறங்கினார்,
அந்த வாக்குச் சாவடியில் வில் சேர் எதுவும் இல்லாத நிலையில், தன் கணவன் தோல் மீது ஏறி வந்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள எந்த அடிப்படை வசதிகளும் இல்லமால் வாக்குச்சாவடிகள் இயங்குவது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையம், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை வசதி, மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வசதியாக சாய்வுதளம், வில் சேர் போன்ற வசதிகள் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.