பொதுவாகவே ஒரு நாளை சிறந்த நாளாக மாற்ற காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு மிக மிக முக்கியமானது. அப்படி காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுதான் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
அப்படி ஆரோக்கியத்தைக் கொடுக்கும் உணவுகளை ஆரோக்கியமாகவும் அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சிலர் உடல் எடையை குறைக்கும் நோக்கிலும் நேரமின்மையாலும் காலை உணவை தவிர்த்து வருகிறார்கள். இவ்வாறு செய்வதால் உயிரை கொஞ்சம் கொஞ்சமா கொல்லும் கொடிய நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
காலை உணவை தவிர்த்து வருவதால் உணவுக்குழாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் பித்தப்பை, பித்தநாள புற்றுநோய் என்ற கொடிய நோய்கள் ஏற்படும் என்று அண்மைய ஆய்வு சொல்லியிருக்கிறது.
காலை உணவை தவிர்த்து வருவதால் குளுகோஸ் வளர்ச்சிதை மாற்றம், அழற்சி, உடல் பருமன், புற்று நோய் மற்றும் இருதய நோய் வழிவகுக்கும் என்று எச்சரித்திருக்கின்றனர்.
காலை உணவை எடுத்துக் கொள்வது உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களையும் அதிக ஆற்றலையும் கொடுக்கிறது. நாள் ஒன்றுக்கு 3 வேளைகளும் சாப்பிடுவது நம் பசியை பராமரிக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
காலையில் உணவு சாப்பிடாவிட்டால் வளர்சிதை மாற்றத்தில் மரபணுக்களைப் பாதிக்கலாம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படவும் காரணமாக அமையும்.
காலை உணவைத் தவிர்ப்பது உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் தமனிகளில் அடைப்புக்கு வழிவகுக்கும். நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களைப் பெற காலை உணவு உதவுகிறது. ஆனால் சாப்பிடாமல் இருப்பதன் மூலம், இரத்த சோகை உள்ளிட்ட ஊட்டச்சத்து குறைபாடுகளை சந்திக்க நேரிடும்.
காலை உணவை தவறாமல் சாப்பிடுவது உங்கள் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது, உங்கள் நினைவாற்றல் மற்றும் மூளை சக்தியை அதிகரிக்கிறது காலை உணவை சாப்பிடாதது ஆரோக்கியமற்ற பசியை அதிகரிக்கிறது, இது இறுதியில் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
உங்கள் உடல் இரவு முழுவதும் பட்டினி கிடப்பதால், காலையில் சாப்பிடுவதைத் தள்ளிப்போடுவதால், சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை விரும்பி, உடல் பருமனை உண்டாக்குகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.