ஒரு நாளைக்கு கொஞ்சம் கொஞ்சமாக எத்தனை வேலை வேண்டுமானாலும் சாப்பிடலாம். இருப்பினும், பள்ளி, கல்லூரி மற்றும் வெளியே பணியிடங்களுக்கு செல்வோர் எப்போதும் மூன்று வேளை சாப்பிடுவது என்பது மிக முக்கியமானது. அதிலும் காலை உணவை தவிர்க்காமல் உட்கொள்ள வேண்டும்.
நம் வயிறு நீண்ட நேரம் பசியாற இருக்கவும், உடலும் ஆற்றலுடன் இருக்கவும் காலை உணவை நாம் சாப்பிட வேண்டும். உடல் எடையை குறைக்கும் எண்ணத்தில் பலரும், காலை உணவை தவிர்க்கிறார்கள் ஆனால் இதை செய்யக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். குறைந்த கலோரி கொண்ட சில காலை உணவு வகைகளை இதில் பார்க்கலாம். இதனை சாப்பிடுவதன் மூலம், உங்கள் வயிறும் நிரம்பும், உடல் எடையும் அதிகரிக்காது எனலாம்.
அவல்:
பலரும் அவலை (Poha) சாப்பிட விரும்புகிறார்கள். அதனை காலை உணவாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவல் ஒரு குறைந்த கலோரி கொண்ட உணவாகும், இதை சாப்பிட்டால் வயிறும் நிரம்பும், எடையும் கட்டுக்குள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்லெட்:
காலையில் காய்கறிகள் போடப்பட்ட ஆம்லெட் சாப்பிடலாம். ஆம்லெட் முட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. முட்டை புரதத்தின் சிறந்த ஆதாரமாகவும் உள்ளது. காய்கறிகள் நிறைந்த ஆம்லெட் சாப்பிடுவதால் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும். எடை கூடும் என்ற கவலையும் இருக்காது. இத்துடன் எலும்புகள் வலுபெறும் மற்றும் எலும்பு சார்ந்த நோய்களும் நீங்கும்.
பாசிப்பருப்பு சீலா:
தாமிரம், ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின்கள், வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல சத்துக்கள் இந்த பாசிப்பருப்பு சீலாவில் காணப்படுகின்றன. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை அதிகமாக அதிகரிக்காது மற்றும் செரிமானமும் ஆரோக்கியமாக இருக்கும்.
இட்லி:
இட்லி என்பது மிகக் குறைந்த கலோரி கொண்ட காலை உணவாகும், இதை நீங்கள் காலையில் சாப்பிடலாம். இதை சாப்பிடுவதால், வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருப்பதோடு, எளிதில் ஜீரணமாகவும் செய்யும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் இதில் உள்ளன. இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.