தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண், திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி-கல்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரீத்தி (20). இவரும் வெள்ளக்குட்டை பகுதியை சார்ந்த அன்பு என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு, மிட்டூர் பகுதியில் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜெயபிரீத்தி தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்தார்.
அதன் பின் பெற்றோர் சமாதானம் பேசி கணவர் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். ஆனால், ஜெயபிரீத்தி திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஜெயபிரீத்தியின் வீட்டாருக்கு, கணவர் அன்பு தெரிவித்தார். அதன் பின் தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், அவரின் உடலை மீட்டு கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் விட்டார், ஜெய பிரீத்தி தற்கொலை செய்து கொள்ளவில்லை, கணவர் அன்பு அவரை கொலை செய்து விட்டார் என குற்றம் சாட்டினர்.
பெண்ணின் உடலை தர பொலிஸ் காலதாமதம் செய்து வருவதாக கூறி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், அவரது சொந்த ஊரான வாணியம்பாடி- கல் மண்டபம் பகுதியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொலிசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர்கள் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.