காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிக் பாஸ் ஜாக்குலின் தன்னுடைய காதலன் யார் என்பதை இன்ஸ்டா பதிவு மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
பிரபல டிவி நகழ்ச்சியில் ககலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின். இதில் பரபலமான ஜாக்குலினுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது.
நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். இது தவிர சீரியல்களிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் 8 இல் இவருக்கு போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கொடுத்தது.
இந்த சீசனில் கடைசி சுற்று வரை சென்று பணப்பெட்டி டாஸ்கில் நேரத்திற் வராமல் தாமதமாக உள்ளே வந்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தற்போத பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்கிடிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் காதலர் தினமான இன்று தன்னுடைய காதலன் யார் என்பதை புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
யுவராஜ் செல்வநம்பி என்பவரை தான் ஜாக்குலின் காதலிக்கிறாராம். காதலர் தினத்திற்காக நீதானே என் பொன்வசந்தம் என்கிற பாடலுடன் யுவராஜை ஜாக்குலின் டேக் செய்து இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்திருக்கிறார்.
அதற்கு அவரோ என் கொத்தமல்லி என ஜாக்குலினை செல்லமாக அழைத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் இணையவாசிகள் வாழ்த்துக்களை கவித்து வருகின்றனர்.