அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 2 வயது குழந்தை ஒன்று காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு பொலிசாரும் உள்ளூர் மக்களுமாக குழந்தையை தேடி வந்தார்கள்.
அமெரிக்காவின் Cheyenne என்ற பகுதியில் Athian Rivera என்ற குழந்தை காணாமல் போனான்.
பொலிசாரும் உள்ளூர் மக்களுமாக குழந்தையை தேடி வந்த நிலையில், குழந்தை Athian குப்பைத்தொட்டி ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.
இந்த சம்பவம் தொடர்பாக Athianஇன் தாயின் முன்னாள் காதலனான Wyatt Dean Lamb (27) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்ற ஆண்டு, இதே நபர், Athianஇன் தாயான Kassandra Orona என்ற இளம்பெண்ணை கழுத்தை நெறித்துக் கொல்லமுயன்றதாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், Athianஇன் தாயான Kassandra Orona, பேஸ்புக்கில் தனது மகனுக்காக இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், தான் செய்த ஒரே தவறு, தவறான நபரிடம் தன் குழந்தைகளை விட்டதுதான் என்றும், தன் குழந்தையின் கோர சாவுக்கு தான்தான் காரணம் என்றும், ஒவ்வொரு நாளும் அந்த நினைவு தன்னை வாட்டிவதைப்பதாகவும் தெரிவித்திருந்தார். பின்னர் அந்த செய்தி அகற்றப்பட்டுவிட்டது.