இலங்கையில் காணாமல் போனவர்களில் இதுவரை 19 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனோரைக் கண்டறியும் செயலகங்கள் இதுவரை 16,966 பேரை காணாமல் போனதாக பதிவு செய்துள்ளன.இதில் 3,742 பேர் பாதுகாப்பு தரப்பினராக (படை, பொலிஸார்) இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.6,449 பேரின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 10,517 பேர் தொடர்பான விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.
2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு – 7,406 பேர் காணாமல் போயுள்ளனர்2000 ஆம் ஆண்டிற்கு முன்பு – 9,560 பேர் காணாமல் போயுள்ளனர்2000 பிறகு காணாமல் போனவர்களில் 6,449 பேரின் விசாரணைகள் முடிவடைந்துள்ளன.
நிறைவு செய்யப்பட்ட விசாரணைகளில் இருந்து 19 பேர் உயிருடன் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.அவர்களது விபரங்கள் 2024ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
2,604 பேர் காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.407 பேர் மரணச் சான்றிதழிற்கான சிபார்சை பெற்றுள்ளனர்.4,408 பேர் இடைக்கால நிவாரணத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கி வருவதாகவும், தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.