கழிவுக்கப்பல் ஒன்றின் எதிரில் இந்த அரசாங்கம் மண்டியிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
சேருவில பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு எதிராக எவரேனும் செயற்பட்டால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உதவிகள், நன்கொடைகளினால் தம்மை முடக்கிவிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் எந்தவொரு எதிர்க்கட்சிக்கும் வெளிநாடுகள் அபிவிருத்திப் பணிக்காக உதவிகளை வழங்கியது கிடையாது எனவும், தமக்கு அவ்வாறு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்காக செயற்பட்டு வரும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ராஜதந்திர ரீதியில் உதவிகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கழிவுகள் அடங்கிய கப்பல் ஒன்றின் எதிரில் இந்த அரசாங்கம் மண்டியிட்டது என்பதனை அச்சமின்றி தாம் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசாங்கத்தின் பலவீனத்தன்மை நன்கு புலப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன சேதனப் பசளை நிறுவனத்திற்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் அவர் இவ்வாறு தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் செயற்படும் மரபு ரீதியான எதிர்க்கட்சியின் வகிபாகத்தை வகிக்க தாம் தயாரில்லை எனவும் சஜித் தெரிவித்துள்ளார்.