கல்முனையில் குருந்தையடி ரெட்குரோஸ் தொடர்மாடிக் குடியிருப்பில் இன்று செவ்வாய்கிழமை 92 பேருக்கு மேற்கொள்ளப்ட்ட அன்டிஜன் பரிசோதனையில் 18 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை 8 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்தனர். இதற்கமைய குறித்த பகுதியில் 26 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கல்முனை வடக்கில் கடந்த இரு தினங்களில் 47 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது.
கல்முனை வடக்கு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஆர்.கணேஸ்வரன் தலைமையிலான பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் கல்முனை, பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு, நற்பிட்டிமுனை ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றைக்கண்டறிவதற்கான அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இன்று செவ்வாய்கிழமை கல்முனை வடக்கு சுகாதார்ப்பணிமனையினால் பிரதேசத்தில் 130 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.
பொதுமக்கள் அனைவரும் பிரதேசத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்க்கு சுகாதாரப்பரிவினருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் சுகாதாரவிதிமுறைகளை இறுக்கமாகப்பேணுமாறும் கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரவைத்திய அதிகாரி வைத்தியர் ஆர்.கணேஸ்வரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.