கணவன் வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த கற்றல் குறைபாடுகள் உள்ள 24 வயது கர்ப்பிணிப் பெண், தனது உறவினர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக மாவட்டம் புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இது குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த சம்பவத்தின் பின்னணி வெளிவந்துள்ளது.
கற்றல் சிரமங்களைக் கொண்ட 24 வயதான அப்பெண் ஐந்து மாதங்களுக்கு முன்பு மனநல குறைபாடு உள்ள ஆணுடன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் கர்ப்பமானார்.
இந்த நிலையில், மார்ச் 3-ஆம் திகதி, அவரது பெற்றோரும் கணவரும் வெளியில் சென்றிருந்தபோது, ஒரு வயதான நபர் (பெண்ணின் உறவினர்) அவரது வீட்டிற்கு வந்து, அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு இருந்த வேறு இரண்டு உறவினர்கள் சேர்ந்து கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண், ஆரம்பத்தில் தனக்கு நடந்த வன்கொடுமை யாரிடமும் சொல்லவில்லை.
இந்த நிலையில், அப்பெண்ணுக்கு கடந்த புதன்கிழமை உடல்நலப் பிரச்சினைகளை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு சென்று காண்பித்தபோது, ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.இதையடுத்து, அவரது தந்தை உடனடியாக அந்த இரண்டு உறவினர்கள் மீது உள்ளூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பொலிஸார் கைது செய்து, அவர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 342 (முறையற்று சிறை வைத்தல்) மற்றும் 376 (L) (மன அல்லது உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், பொலிஸார் அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்ற அந்த வயதான நபரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது.