சீனாவில் கடந்த ஒரு ஆண்டாக கருத்தரிக்க முயற்சித்து வந்த பெண், மருத்துவ சோதனைக்கு பின் உண்மை தெரிந்து கடும் அதிர்ச்சியடைந்தார்.சீனாவை சேர்ந்த பிங்க்பிங் என்ற பெண், தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அங்கிருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அப்போது மருத்துவர்கள் அவரது கணுக்காலை எக்ஸ் ரே எடுத்து பார்த்த போது, அவருக்கு இளம் பருவம் முதலே எலும்புகள் சரியாக வளரவில்லை என்பது தெரிய வந்தது.அதுமட்டுமின்றி, அவர் கடந்த ஒரு ஆண்டாக கருத்தரிக்க முயற்சித்து வருகிறார். ஆனால் அது முடியவே இல்லை.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ஒரு பெண் பெறும் சிற்றின்பத்தை அவர் பெறவேயில்லை.
இது குறித்து அவர் கூறுகையில், நான் சிறு வயதில் இருக்கும் போது, என் தாய் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.அப்போது மருத்துவர்கள், நான் மற்றவர்களை விட, மெதுவாக வளர்வதாக கூறினார்கள், நாளைடைவில் அந்த பிரச்சனை எனக்கு சரியாகிவிட்டதாக நினைத்தேன்.ஆனால், நான் வளர்ந்த பிறகு இப்போது மீண்டும் நான் சில சங்கடங்களை உணர்ந்தாக வேதனையுடன் கூறியுள்ளார்.
பிங்க்பிங் உட்சுரப்பியல் நிபுணர்களிடம், நானும் எனது கணவரும் பல வருடங்களாக ஒரு குழந்தையை பெறுவதற்காக முயற்சி செய்து வருகிறோம். அதற்கும் இந்த எலும்பு பிரச்சனைக்கும் காரணம் உண்டா? என்று கேட்டுள்ளார்.இதையடுத்து அவரை ஆய்வு செய்த போது, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தது காரணமாக அவர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது பிறவி அட்ரீனல் ஹைப்பர் பிளாசியா எனப்படும் நோயின் அறிகுறி எனவும், அவருக்கு எடுக்கப்பட்ட மரபணு பரிசோதனையில் அவரது காரியோ டைப் 46, எக்ஸ்.ஒய் இருப்பது தெரிய வந்தது. இது ஆண்களில் இருக்கும் காரியோ டைப்களின் அளவு என உட்சுரப்பியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.பிங்க்பிங் பிறப்பால் ஒரு ஆண். இதன் காரணமாக அவருக்கு கருப்பைகள் இல்லை. ஆனால் ஆண் உறுப்பிற்கு பதிலாக அவருக்கு பெண் உறுப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.