கனடாவில் வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 31 இலட்ச ரூபா மோசடி செய்த நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரீவித்துள்ளனர்.
யாழ். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கனடாவில் வேலைவாய்ப்பை பெற்று தருவதாக யாழை சேர்ந்த இளைஞனிடம் இருந்து 31 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.
பணத்தினை பெற்றுக்கொண்டு நீண்ட நாட்கள் ஆகியும், கனடா அனுப்பவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில், இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவரை கைது செய்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.