கனடாவில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை 8 இலட்சத்து 64 ஆயிரத்து 196 ஆக உயர்ந்துள்ளது.அத்துடன் கொரோனா தொற்றினால் இதுவரை ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து 960 ஆக பதிவாகியுள்ளதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,724 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 45 மரணங்களும் பதிவாகியுள்ளன.அங்கு அதிகளவாக ஒன்ராறியோவில் 2 இலட்சத்து 99 ஆயிரத்து 754 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 6,960 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கியூபெக் மாநிலத்தில் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 3 பேர் நோயாளிகளாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 10 ஆயிரத்து 385 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.