கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது காரில் இருந்த இருவர் காயமடைந்தனர்.
அவர்கள் தற்சமயம் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் இன்றும் அடையாளம் காணப்படவில்லை.