திருகோணமலை பகுதியில் 14 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிரதேச மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பிராந்திய வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று (30) அதிகாலை இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்டுள்ள கந்தளாய் பிராந்திய வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மலைப்பாம்பு திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் நீதவான் நீதிமன்ற பிரதேசத்தின் அருகில் இருந்த பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் குறித்த மலைப்பாம்பு கடந்த இரண்டு நாட்களாக வந்து சென்றதை அப்பகுதியில் வசிப்போர் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பிடிக்கப்பட்ட மலைப்பாம்பினை பிரதேச பொது மக்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து பிடித்து வனஜீவராசி அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும், குறித்த பாம்பினை யால வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.