கண் பார்வை இழந்த மாணவி 9ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி ஹிமாஷா கவிந்தியா என்ற மாணவியே இச் சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவி பிறவியிலேயே பார்வையற்றவர் எனவும், அனுராதபுரத்தில் பிறந்த மாணவி சிறுவயதிலேயே எதையும் புரிந்து கொள்ளும் திறன் பெற்றிருந்ததாகவும் சவால்களை வெற்றிகரமாக முறியடிப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர் .
2016ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து 173 புள்ளிகளைப் பெற்ற பின்னர், அவரது பெற்றோர் அவளை குருநாகல் மஹிந்த கல்லூரியில் சேர்த்தனர்.
இந்த மாணவி பாடுவதில் சிறந்தவர் என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.