நாம் இந்த காலத்தில் கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் மனிதனை பார்த்திருக்க முடியாது.
ஆனால் கால்குலேட்டர் இல்லாமல் ஒரு மனிதனால் கூட்டல், கழித்தல், பெருக்கல், வர்க்க மூலம் காணுதல் என்பது சாத்தியமாக என்றால் சாத்தியம் தான் என்று மலேசியா வாழ் இந்திய சிறுவன் யாஷ்வின் சரவணன் நிருபித்துள்ளார்.
யாஷ்வின் சரவணன் ஏசியன் சாம்பியன்ஷிப்பில் கால்குலேட்டரையும் மிஞ்சிய வேகத்தில் கணித்துள்ளார் என்றால் நம்மால் நம்ம முடியுமா?
15 வயதான குறித்த சிறுவன் பிரபலமான Asia’s Got Talent நிகழ்ச்சியில் கால்குலேட்டைரை விட வேகமாக கணித்து நடுவர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளார்.
அவர் மலேசியாவில் பிறந்தாலும், இவரின் பூர்வீகம் இந்தியா தான். இவர் தமிழரா என்று அனைவருக்கும் ஒரு பரபரப்பு ஏற்பட்டிருக்கும். இவரே இவருக்கு ஹீயூமன் கால்குலேட்டர் என்று பெயரையும் வைத்துள்ளார்.
கணித்தில் தனது அற்புத திறமையால், உலக மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்தியுள்ளார்.
யாஷ்வின் சரவணன் குடும்பம் கேரளாவை சேர்ந்தாகவும் இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் மலேசியாவில் தமிழர்களை போலவே வாழ்ந்து வருகின்றனர்.