தமிழகத்தில் கணவர் வெளிநாட்டில் இருக்க, இளைஞரை காதலித்த 36 வயது பெண் கொலை சம்பவத்தில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிதம்பரம் அருகே புவனகிரி- கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஆடிட்டர் அலுவலக மாடிப் படிக்கட்டுகளுக்கு அடியில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த சத்தியா என்ற 36 வயது பெண் இறந்த நிலையில், கிடந்ததால் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த பொலிசார் அழுகிய நிலையில் கிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது, அந்த கட்டிடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பொலிசார் ஆராய்ந்தனர். இதில் கடந்த 29-ஆம் திகதி இரவு அந்த கட்டிடத்திற்கு சந்தியாவை ஆண் நபர் அழைத்து செல்லும் காட்சி இருந்தது.
அதன் பின் அதிகாலையில், அந்த நபர் மட்டுமே தனியாக வந்தார், உடன் வந்த சந்தியா வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொலிசார், அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த நபர், தரசூர் கிராமத்தை சேர்ந்த 29 வயதுமுரசொலிமாறன் என்பது தெரியவந்தது. பொலிசார் தன்னை தேடுவதை தெரிந்து கொண்ட அந்த இளைஞன், பொலிசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக, பால்டாயில் என்னும் கொடிய விஷத்தை தனது காதில் ஊற்றி தற்கொலை நாடகம் ஆட, பொலிசார் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி மில் ஒன்றில் சத்யாவும், முரசொலிமாறனும் ஒன்றாக வேலைபார்த்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. கணவர் ஊரில் இல்லாத நிலையில் இருவரும் தனிமையில் சந்தித்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்,
இந்த நிலையில் சம்பவத்தன்று முரசொலிமாறனை சத்யா தேடிச் சென்றுள்ளார். அப்போது அலுவலகத்தில் யாரும் இல்லாததால் இருவரும் தனிமையை கழித்துள்ளனர்.
அதன் பின், தன்னை திருமணம் செய்துகொள்ள சத்யா வற்புறுத்தியதால் போதையில் இருந்த முரசொலி மாறன், சத்யாவிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சத்யாவை போதையில் கொலை செய்த முரசொலிமாறன், அவரின் சடலத்தை
மறைப்பதற்காக மாடிப்படிகளுக்கு அடியில் உள்ள பழைய பொருட்களுக்குள் போட்டு விட்டு தப்பியுள்ளான்.
மேலும் சத்யாவின் உடல் கூறு அறிக்கையில் சத்யா உயிரிழந்த பின்னரும் அவர் பாலியல் ரீதியாக கொடூரமாக துன்புறுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசில் சிக்கிக் கொண்டால் அவமானப்பட நேரிடுமே என்ற அச்சத்தின் காரணமாகவே சடலத்தை மறைத்ததோடு, காதில் பால்டாயிலும் ஊற்றி தற்கொலை செய்து கொள்வது போல நடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
உயிரிழந்த சத்யாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.