இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் கணவர் ஒருவர் தன்னால் மனைவியிடம் அடி வாங்க முடியவில்லை என, பொலிஸில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் சிங். ஆசிரியரான இவர் சுமன் என்ற பெண்ணை ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், மனைவியிடம் அடி வாங்க முடியவில்லை என, அஜித் சிங் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். தங்கள்து , ஆரம்ப கால திருமண வாழ்க்கை அமைதியாக கழிந்த நிலையில் கடந்த ஓராண்டு காலமாக மனைவி தன்னை அடித்து துன்புறுத்துவதாக வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
தனது மனைவி பாத்திரம், குச்சி, கிரிகெட் மட்டை உள்ளிட்ட பொருள்கள் மூலம் தன்னை அடிப்பதாக தெரிவித்த ஆசிரியர், அதற்கான ஆதாரங்களைக் கொண்ட சிசிடிவி பதிவுகளையும் அவர் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.
அதேசமயம் தனது மனைவிக்கு எதிராக இவர் ஒரு முறை கூட பதில் தாக்குதல் நடத்தியதில்லையாம். தான் ஒரு ஆசிரியர் என்பதாலும், தனது மகனின் எதிர்காலம் கருதியும் இவ்வளவு காலம் கண்ணியத்துடன் பொறுமை காத்து வந்ததாக கூறும் அவர், சமீப காலமாக மனைவி எல்லை மீறி செல்வதாகவும் தாக்குதல் காரணமாக தனக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் முறையிட்டுள்லார்.
இந்நிலையில் கணவரை மனைவி தாக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியுள்ளது.