விழுப்புரம் மாவட்டம் அடுத்த விக்கிரவாண்டி, பனையபுரம் காலனியை சேர்ந்தவர் லியோபால்.இவர் வேன் டிரைவராக இவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு, சுஜித்தாமேரி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
மேலும், இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இந்த நிலையில், சென்னையில் வசித்து வந்த லியோபாலுக்கு கொரோனா காரணமாக வேலை போனது.இதனால், இந்த தம்பதி சொந்த ஊருக்கே சென்று குழந்தைகளுடன் வசிக்க தொடங்கியுள்ளனர்.இதனையடுத்து, லியோபாலின் மனைவிக்கும், பக்கத்து வீட்டு இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மது போதையில் வீட்டுக்கு வந்து உறங்கிக் கொண்டிருந்த லியோபாலை ராதாகிருஷ்ணன் இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர், வீட்டு தோட்டத்துக்குள் குழி தோண்டி லியோபாலின் உடலை இருவரும் சேர்ந்து புதைத்து விட்டனர்.பின்னர், தன் மாமனார் சகாயராஜை தொடர்பு கொண்டு, கணவர் லியோபாலை பல நாள்களாக காணவில்லை என்று கூறி சுஜித்தா மேரி நாடகமாடியுள்ளார்.
இதையடுத்து, சகாயராஜ் போலீஸில் புகார் கொடுக்கலாம் என கூறியுள்ளார். பின் மருமகள் வீட்டுக்கு சென்றுள்ளார்.ஆனால், வீட்டில் சுஜித்ராமேரி இல்லை. குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளன. குழந்தைகளிடத்தில் கேட்டபோது, அம்மாவை காணவில்லை என கூறியுள்ளனர்.
இதைதொடர்ந்து, வீட்டு தோட்டத்தின் தடயங்களை கண்டு போலீசில் புகார் அளிக்க, அங்கு லியோவின் சடலமும் கண்டுள்ளனர்.பின்னர் விசாரணையில், இருவரையும் தேடிவந்த நிலையில், கேரளாவில் ராதாகிருஷ்ணன் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அதன்பின்னர், ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தில், ஏற்கனவே ஒரு கொலை செய்துள்ளேன். அதே பாணியில் லியோபாலை கொலை செய்தேன் என அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளான்.இதனால், ராதாகிருஷ்ணன் இதற்கு முன்னதாக யாரை கொலை செய்தான் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் குடும்பத்தினர்கள் இருவருக்கும் தக்க தண்டனையை வழங்க வேண்டும் என கதறியுள்ளனர்.