இந்தியாவில் மனைவிக்கு உண்மை தெரிந்ததால், கணவர் அவரை அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது க ர்நாடக மாநிலம் வேம்கல் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் இவருக்கும் சாந்தா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது
இந்நிலையில், இந்த தம்பதி, சமீபத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஓசூர் சென்றுள்ளனர் அங்கு கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பிரவீன்குமார், சாந்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்
ஆனால், அவரோ மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, அங்கிருந்து உடலை ஆம்புலன்சில் கோலார் பகுதிக்கு எடுத்து சென்றுள்ளார் அங்கு பெண்ணின் வீட்டாரிடம் உங்கள் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துவிட்டதாக கூறி, உடலை அவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்
ஆனால், சாந்தாவின் உ டல் மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயம் இருந்ததால், சந்தேகம் அடைந்த பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் அதன் பின் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அவர் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
இதைத் தொடர்ந்து பிரவீன் குமாரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் அப்போது, தனக்கும், வேறொரு பெண்ணும் பழக்கம் இருந்ததை, சாந்தா கண்டுபிடித்துவிட்டதால், அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் இதையடுத்து அவரை கைது செய்து பொலிசார் சிறையில் அடைத்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,